தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை தற்போது வரலாறு காணாத தண்ணீர் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது. தண்ணீர் பிரச்சனையின் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக வெளியான செய்திகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பொது மக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீர் லாரிக்கு காத்திருக்கும் அவல நிலையை சென்னை முழுக்க காணமுடிகிறது. இந்நிலையில் டைட்டானிக் படத்தில் ஹீரோவாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் லியார்னடோ டிகாப்ரியோ.
இவர் இயற்கையை பாதுகாப்பது குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் சென்னையில் தண்ணீர் பிரச்சனை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், அந்த பதிவில் மழை மட்டும் தான் சென்னையை காப்பாற்ற முடியும். கிணறு முற்றிலும் வற்றி விட்டது. தென்னிந்திய நகரான சென்னையின் நான்கு ஏரிகளும் வற்றிவிட்டது. இந்த நகருக்கு உடனடி தீர்வு தேவைப்படுகிறது.
மக்கள் அரசு தண்ணீர் லாரிகளுக்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் மழைக்காக கடவுளிடம் மன்றாடுகிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.