LEO லுக்கில் விஜய்.. "எல்லாத்துக்கும் நன்றி".. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த லேட்டஸ்ட் BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

LEO படத்தின் புதிய படப்பிடிப்பு தள புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | RRR நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய KGF யஷ் மகன் 😍 செம்ம வீடியோ  

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர்
இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மிஷ்கின் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பி இருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
.
இந்நிலையில் இந்த லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார்.

Images are subject to © copyright to their respective owners.

இதனை முன்னிட்டு தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை லோகேஷ் பதிவிட்டுள்ளார். அதில், "எல்லாவற்றுக்கும் நன்றி விஜய்ண்ணா" என ட்வீட் செய்து லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வெண்ணிற உடையில் சாலட் & பெப்பர் லுக்கில் புதிய ஹேர் ஸ்டைலில் விஜய் காணப்படுகிறார்.

Also Read | LEO லோகேஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சஞ்சய் தத் & மலையாள வில்லன் நடிகர்.. TRENDING

தொடர்புடைய இணைப்புகள்

Leo Vijay Latest BTS Image shared by Lokesh Kanagaraj

People looking for online information on Leo, Leo Vijay Latest BTS Image, Lokesh Kanagaraj will find this news story useful.