விஜய் நடிக்கும் 'LEO'.. அடுத்த லுக் போஸ்டர் ரெடி போல.. காஷ்மீரில் பிரபல இயக்குனர் கொடுத்த HINT!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

LEO படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படத்தை இயக்குனர் & வசனகர்த்தா ரத்னகுமார் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | AGA NAGA: PS - 2 படத்தின் முதல் சிங்கிள் . வெளியான கார்த்தி & த்ரிஷாவின் ரொமான்டிக் பாடல்..

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர்
இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.
.
இந்நிலையில் இந்த லியோ படத்தின் வசனகர்த்தா ரத்ன குமார் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஷ்மீரில் இருந்து ஒரு புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார். இயக்குனர் தீரஜ் வைத்தி, போஸ்டர் வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை ரத்னகுமார் பகிர்ந்துள்ளார். கோபி பிரசன்னா காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பது படத்தின் போஸ்டர் பணிகள் நடைபெற்று வருவதை குறிப்பதாக அமைந்துள்ளது.

Also Read | விடுதலை - 1 படத்தின் ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Leo Movie Shooting Spot Rathna Kumar Gopi Prasanna Viral Photos

People looking for online information on Leo, Leo Movie Shooting update, Rathna Kumar will find this news story useful.