சந்தானம் நடிக்கும் 'பாரிஸ் ஜெயராஜ்'.. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடும் பிரபல இசையமைப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒரு பாடலை பாடியுள்ளார். 

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கியவர் சந்தானம். இவர் தற்போது பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ-1 திரைப்படத்தை இயக்கிய ஜான்சன் இப்படத்தை இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்நிலையில் தற்போது பாரிஸ் ஜெயராஜ் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவா ஒரு பாடலை பாடுகிறார்.

இந்த பாடலின் ரெக்கார்டிங் புகைப்படத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏ-1 திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்த நிலையில், நிச்சயம் ஒரு செம கானா பாடலாக இது இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் படத்தில் பாடும் தேவா | legendary music director sings in santhanam's paris jayaraj

People looking for online information on Deva, Paris Jayaraj, Santhanam, Santhosh Narayanan will find this news story useful.