அரசு மருத்துவமனையில் பழம்பெரும் நடிகை ஜெய்க்குமாரி.. நேரில் சந்தித்த அமைச்சர்.. என்ன ஆச்சு..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜெய்குமாரி. 72 வயதான இவர், 1966-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி திரைப்படத்தில் வில்லன் நடிகர் நம்பியாருக்கு கண் தெரியாத தங்கையாக நடித்ததன் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

Advertising
>
Advertising

இதனைத் தொடர்ந்து ‘அனாதை ஆனந்தன்’, ‘மன்னவன்’, ‘ரிக்‌ஷாக்காரன்’, ‘காசேதான் கடவுளடா’ உட்பட பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்த ஜெய்க்குமாரி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  தற்போது சென்னை வேளச்சேரியில் வசித்துவரும் இவர் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சுமார் ஒரு மாத காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், நங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், நடிகை ஜெய்குமாரிக்கு 2 சிறுநீரகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாத காரணமாக நடிகை ஜெய்குமாரி தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேராமல் இருந்து வந்துள்ளார்..

இந்த நிலையில் வயிற்றுவலி அதிகமானதால், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர், மா.சுப்ரமணியம் அவரை நேரில் சந்தித்ததுடன், அவருக்கான சிகிச்சைகளை நல்முறையில் பண்ணுவதற்கு உத்திரவாதம் அளித்துள்ளார்.

Legendary actress jaikumari has kidney failure

People looking for online information on Actress jaikumari, நடிகை ஜெய்குமாரி, Legendary actress jaikumari will find this news story useful.