துணிவு & வாரிசு படங்கள் குறித்து நடிகர் சரவணன் அருள் ட்வீட் செய்துள்ளார்.
![Legend Saravanan Arul about Thunivu Varisu Legend Saravanan Arul about Thunivu Varisu](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/legend-saravanan-arul-about-thunivu-varisu-new-home-mob-index.jpeg)
Also Read | எமோஷன் ஆன GP முத்து.. டக்குன்னு கமல் கேட்ட கேள்வி.. விழுந்து சிரிச்ச போட்டியாளர்கள்..!
துணிவு
நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023) அன்று துணிவு படம் திரையரங்குகளில் வெளியானது. அன்று அதிகாலை 1 மணிக்கே துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.
நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
வாரிசு
நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் கடந்த (11.01.2023) அன்று வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வாரிசு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி கைப்பற்றி உள்ளார். சேலம் ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகரான லெஜன்ட் சரவணன் அருள் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாரிசு & துணிவு படங்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், வாரிசு துணிவு வெற்றிக்கு வாழ்த்துக்கள்…👍" என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Also Read | அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை மம்தா.. புதிய தோற்றத்தில் தனது PHOTO-வை வெளியிட்டு பதிவு!