சாலை விபத்தில் திரையுலக பிரபலமும் அவரது அப்பாவும் பலி - வெளியான அதிர்ச்சி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலங்கானா மாநிலம் நல்கோண்டா மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பிரபல தெலுங்கு திரைப்பட விநியோகிஸ்தர் ஜி கமலக்கர் ரெட்டியும் அவரது அப்பாவும் பலியான தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமலக்கர் ரெட்டி தனது அப்பாவின் சிகிச்சைக்காக நெல்லூரில் இருந்து ஹைதராபாத்திற்கு ஆம்புலன்ஸில் வந்துள்ளார். அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கமலக்கர் ரெட்டி ஆந்திராவில் புகழ்பெற்ற விநியோகிஸ்தர்களில் ஒருவராவார். இவர் 'அர்ஜூன் ரெட்டி' மற்றும் ஏஜென்ட் சாஸ் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படங்களை விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leading film distributor and his father dies in a road accident ft G Kamalakar Reddy | பிரபல திரைப்பட விநியோகிஸ்தரும் அவரது அப்பாவும் சாலை விபத்தில

People looking for online information on G Kamalakar Reddy will find this news story useful.