இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.
“மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது.
இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.
அதன் பின்னர் நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளே கதைக்களம்.
சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது.
தற்போது சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இந்த 'சார்பட்டா பரம்பரை' படத்தின் கதையை முதன்முதலில் நடிகர் கார்த்தியிடமே இயக்குனர் பா.ரஞசித் கூறியுள்ளார். மெட்ராஸ் கதையை எடுப்பதற்கு முன்பே சார்பட்டா பரம்பரை கதையையே பா. ரஞ்சித் எடுக்க விரும்பியுள்ளார்.
ஆனால் மெட்ராஸ் கதையை கார்த்தி தெரிவு செய்ததால் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் காரத்தியால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இது பற்றி 'மெட்ராஸ்' பட இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.