ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
Also Read | அருள்நிதி நடிக்கும் ‘D ப்ளாக்’… டிஜிட்டல் & ஓவர்சீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ருத்ரன்
பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கிறார். கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு
“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியில் நடந்து முடிந்த படப்பிடிப்பை அடுத்து சென்னையில் சமீபத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்தது. இதில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் சரத்குமார் பங்குபெறும் காட்சிகள் படமாக்கபட்டன. இந்த படத்தில் வில்லனாக சரத்குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படப்பிடிப்புத் தளத்தில் சரத்குமார் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றன.
இந்த படத்தில் பழைய கிளாசிக் படமான வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்.
ரிலீஸ் அப்டேட்
இந்நிலையில் இன்று படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாஸான போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படதின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. போஸ்டரில் சன் தொலைக்காட்சியின் லோகோவும் இடம்பெற்றுள்ளது.
Also Read | Breaking: வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’…. ‘வேற லெவல்’ ஷூட்டிங் update