கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. இதையடுத்து நடிகர் விஷால் நடிக்கும் 32வது திரைப்படம் லத்தி.
நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து லத்தி படத்தை தயாரிக்கிறன. ஏற்கனவே, சன் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான, விஷால் பங்கு பெற்ற “சன் நாம் ஒருவர்”யை இந்த ராணா புரொடக்ஷன்ஸ் தான் தயாரித்தது. இதை தொடர்ந்து தனது நண்பர்கள் ரமணா, நந்தா தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கிறார் விஷால்.
A. வினோத்குமர் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதுகிறார். சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார், பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். A.வினோத்குமார் & பொன்பார்த்திபன் வசனம் எழுதுகிறார்கள். சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார்.
லத்தி திரைப்படம் படம் ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தில் விஷால் போலீசாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஷால் சத்யம், பாயும் புலி, வெடி மற்றும் அயோக்யா ஆகிய படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் துவங்கி உள்ளன. மேலும் படக்குழு ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 12 அன்று இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அவ்வாரத்தில் தொடர் விடுமுறை நாட்கள் அமைந்துள்ளன. கோப்ரா படமும் ஆகஸ்ட் 11 அன்று ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.