தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வந்தது.

இந்த படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரவிந்த் கிருஷ்ணாவுக்கு பதிலாக சில்லுக்கருப்பட்டி, சாணிகாயிதம் பட ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மகாமுனி படத்தில் நடித்த நடிகை இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு 16.10.2021 அன்று பூஜையுடன் துவங்கியது.
ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படக்குழு மேலும் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. பனிமலை பின்னணியில் இந்த போஸ்டரில் தனுஷ் Super Cool ஆக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடந்து வருகிறது.