விஜய்யின் மகள் சாஷா., ட்விட்டரில் இணைந்தாரா..?! UNSEEN புகைப்படங்களும்.. ஷாந்தனு ரிப்ளையும்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் மகள் ட்விட்டரில் இருக்கிறாரா என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அமர்களம் செய்து வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாள்விகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகவுள்ளது. 

இந்நிலையில் இன்று மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள ஷாந்தனு பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை தொடர்ந்து மாஸ்டர் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனிடையே நடிகர் விஜய்யின் மகள் பெயரில் இருந்து ஷாந்தனுவுக்கு வாழ்த்து வர, அவரும் நன்றி என ரிப்ளை கொடுத்தார். ஷாந்தனுவின் ரிப்ளையை அடுத்து, இதுதான் விஜய்யின் மகள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என ரசிகர்கள் சிலர் கமன்ட்ஸ் கொடுத்தனர்.

இதன் பிறகு விசாரித்து பார்த்ததில், இது திவ்யா சாஷாவின் பெயரில் நடத்தப்படும் போலி கணக்கு என தெரிகிறது. விஜய், மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய பதிவுகளும், பார்த்திராத புகைப்படங்களும் இந்த ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

ட்விட்டரில் விஜய் மகளா.? | latest buzz on actor vijays daughter divya shasha in twitter

People looking for online information on Divya Shasha, Master, Shanthanu Bhagyaraj, Vijay, Vijay Daughter will find this news story useful.