மறைந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்.. தேசிய விருது வென்ற இயக்குனர்.. மனம் உருகும் பிரபலங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய அரசு ஆண்டு தோறும், நாடு முழுவதும் வெளியாகும் மிகச் சிறந்த திரைப்படங்கள் மற்றும் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கி, கலைஞர்களை பாராட்டி, அவர்களை கவுரப்படுத்தும் வகையில் தேசிய விருதுகளை அளித்து வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | சிறந்த தமிழ் படம், கூடவே 2 National Award.. இயக்குநர் வசந்த்-ன் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்"

சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்பட பல்வேறு கலைகளில் சிறப்பாக திரைப்படங்களுக்கு பங்காற்றிய கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

இந்நிலையில், தற்போது சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரம் டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில், சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்த 'சூரரைப் போற்று' திரைப்படம், அறிமுக இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருந்த 'மண்டேலா', வசந்த் இயக்கி இருந்த 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' உள்ளிட்ட திரைப்படங்கள் ஏராளமான விருதுகளை அள்ளி அசத்தி உள்ளது.

இதில், சூரரைப் போற்று திரைப்படம், மொத்தம் ஐந்து தேசிய விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் 3 தேசிய விருதுகளையும், அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருந்த மண்டேலா திரைப்படம் 2 தேசிய விருதுகளையும் வென்றுள்ளது.

அதே வேளையில், பிருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருந்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படமும் மொத்தம் நான்கு தேசிய விருதுகளை அள்ளி உள்ளது. சிறந்த சண்டை இயக்கத்துக்கான விருது இந்த படத்தில் பணியாற்றிய ராஜசேகர், மாஃபியா சசி, சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறந்த பின்னணி பாடகிக்கான விருதினை அய்யப்பனும் கோஷியும் படத்தில் வரும் பாடலுக்காக நஞ்சம்மா பெற்றுக் கொண்டார். அதே போல, சிறந்த துணை நடிகருக்கான விருது, இந்த படத்திற்காக நடிகர் பிஜு மேனனுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது இயக்குனர் சச்சிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படம், கேரளாவைத் தாண்டி, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட அய்யப்பனும் கோஷியும் படத்தில், பவன் கல்யாண் மற்றும் ராணா ஆகியோர் நடித்திருந்தனர்.

அய்யப்பனும் கோஷியும் போல இன்னும் சிறந்த படைப்புகளை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த படத்தின் இயக்குனர் சச்சி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், தன்னுடைய 48 வயதில் மறைந்தார். அவரது மறைவு, பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி இருந்த நிலையில், இறந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது தனது கடைசி திரைப்படத்திற்காக தேசிய விருதினையும் வென்றுள்ளார்.

இது தொடர்பாக, நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்ட பலரும் சச்சியை நினைவு கூர்ந்து, ஏராளாமான பதிவுகளை உருக்கத்துடன் வெளியிட்டு வருகின்றனர்.

Also Read | "நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு" தேசிய விருது வென்றதும் GV பிரகாஷ் குமார் போட்ட ட்வீட்..

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Late director Sachy won national award celebrities emotional

People looking for online information on Director Sachy, Late director Sachy won national award, National Award, Sachy will find this news story useful.