நடிகர் சுஷாந்த் சிங்கின் செல்ஃபோன் இன்டர்நெட் ஹிஸ்டரி குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. இது ஒருபுறமிருக்க, சுஷாந்தின் மரணத்தில் அவரது காதலியான நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சுஷாந்த் குடும்பத்தின் தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடிகர் சுஷாந்தின் செல்ஃபோன் இன்டர்நெட் ஹிஸ்டரி குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. சுஷாந்த் இறப்பதற்கு முன்னர் அவர், Painless Death (வலி இல்லாத மரணம்), Bipolar Disorde (மனநல நோய்) ஆகியவை குறித்து அவர் இணையத்தில் தேடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தன்னை பற்றி இணையத்தில் என்ன பேசி கொள்கிறார்கள் என்றும் பார்த்துள்ளார். சுஷாந்தின் இந்த இன்டர்நெட் ஹிஸ்டரி மேலும் இவ்வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.