"LIFT-குள்ள ஒருத்தன் PANT அவுத்து காட்னான்" - லஷ்மி ராமகிருஷ்ணன் பகிர்ந்த பகீர் பாலியல் கொடுமை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குனரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் பற்றி மனம் திறந்துள்ளார். இவர் தனியார் சேனல் நிகழ்ச்சி மூலம் பல பெண்களின் குரலாக விளங்கியவர், நீதியை பெற்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாத ரணமாக அவர் மனதில் படிந்த சம்பவங்களை அவர் விவரிக்கையில் "என் சிறுவயதில் அப்பா ஸ்தானத்தில் இருந்த உறவினர் ஒருவர் அடிக்கடி என் முன்பு தனது அந்தரங்க உறுப்பை காட்டியபடி நின்று இருக்கிறார். ஆரம்பத்தில் அதின் அர்த்தம் என்ன வென்று தெரியாது. போகப்போக வயது வந்த பிறகு அவர் செய்த கொடுமையான செயல் மனதில் ரணமாக மாறியது. இத்தனை நாட்கள் இதை என் மனதின் இருட்டு அறையில் யாரும் அறியாமல் மறைத்து வைத்தேன்.

பிரபலமான எனக்கே இந்த நிலைமை என்றால் எங்கோ இருக்கும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கொடுமைகள் இருக்கும் என்று யோசித்து பார்க்க முடியவில்லை. இது எல்லாம் பழைய காலத்தில் நடந்த கதை என்று நினைக்காதீர்கள். எனது மகளுக்கும் சமீபத்தில் இப்படி ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது.

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது லிப்டில் ஒருவன் தன் பேண்ட்டை அவிழ்த்து காட்டியுள்ளான். பதறிப்போன என் மகள் அலறியபடி ஓடி வந்தார். சிசிடிவியில் தேடி பார்த்தும் அந்த மனிதனின் முகம் தெரியவில்லை. இவையெல்லாம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை யோசிப்பது தான் தீர்வு" என்று கூறியுள்ளார். இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"LIFT-குள்ள ஒருத்தன் PANT அவுத்து காட்னான்" - லஷ்மி ராமகிருஷ்ணன் பகிர்ந்த பகீர் பாலியல் கொடுமை! வீடியோ

நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் பகிர்ந்த பகீர் பாலியல் கொடுமை lakshmi ramakrishnan shares her worst harrasement situation boldly

People looking for online information on Harrasement, Lakshmi Ramakrishnan, MeToo will find this news story useful.