தனுஷ் - ஐஸ்வர்யாவை சேர்த்து வைங்க..ரசிகருக்கு சுளிர் பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செனனை: தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

lakshmi ramakrishnan about Dhanush Aishwaryaa Divorce
Advertising
>
Advertising

நடிகர் தனுஷ் தனது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார். நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்த தம்பதியின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 

lakshmi ramakrishnan about Dhanush Aishwaryaa Divorce

நேற்று முன் தினம் இரவு இருவரும் பிரிவதாக தனித்தனியே அறிக்கை வெளியிட்டனர். அதில் "18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்புபவர்களாக ஒருவரையொருவர் இணைத்து... வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு,எனப் பயணம் செய்தோம்.. இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்... இருவரும் ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனிப்பட்டவர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும்" என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த முடிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த தகவல் வெளியானதிலிருந்து டிவிட்டரில் தனுஷ், ரஜினி, ஐஸ்வர்யா என்ற பெயர்கள் டிரெண்ட் ஆகி வருகின்றன. குறிப்பாக ரஜினி, தனுஷ் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். அதிலும் தனுஷ் ரசிகர்கள் WE ARE WITH U DHANUSH ANNA என டிரெண்ட் செய்து வருகின்றனர். உங்களின் கடினமான சூழலில் நாங்கள் உங்கள் உடன் இருப்போம் என்றும் சில ரஜினி, தனுஷ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷ் செய்த இந்த விவாகரத்து டிவீட்டிற்கு கீழே பதில் டிவீட் செய்த ரசிகர் ஒருவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை டேக் செய்து, “இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? தனுஷ், ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து வைங்க” என பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், “தனுஷ்-ஐஸ்வர்யா மரியாதையான முறையில் பிரிகிறார்கள். ஒருவரையொருவர் தரக்குறைவாகபேசாமல், முறைப்படி விவாகரத்து பெறுவதற்கு முன்பு யாரையும் பொதுவெளியில் ரொமான்ஸ் செய்யாமல், ஒருவருக்கொருவர் மன உளைச்சல் கொடுக்காமல் பிரிகிறார்கள். அவர்களை அவர்கள் போக்கில் தனியாக விட்டு விடுங்கள்” என சுளீர் பதில் அளித்துள்ளார்.

 

 

தனுஷ் - ஐஸ்வர்யாவை சேர்த்து வைங்க..ரசிகருக்கு சுளிர் பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lakshmi ramakrishnan about Dhanush Aishwaryaa Divorce

People looking for online information on Aishwarya Rajinikanth, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ், Dhanush, Dhanush Divorce, Lakshmi Ramakrishnan will find this news story useful.