விஸ்வரூபம் எடுக்கும் ஆசிரியர் மீதான 'பாலியல்' குற்றச்சாட்டு'! - வலுக்கும் பிரபலங்களின் குரல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னையின் கே.கே.நகரில் உள்ள முதன்மையான பள்ளியான பத்மா சேஷாத்ரி பால பவனின் முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள் பள்ளியில் பணிபுரியும் காமர்ஸ் ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களை எழுப்பியுள்ளனர். அந்த ஆசிரியர் பல ஆண்டுகளாகவே பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக அந்த ஆசிரியர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு சில முன்னாள் மாணவர்களும் திரைப் பிரபலங்களும் இதை பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

lakshmi priya YG Mahendran talks over chennai school issue

இதுபற்றி அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ள பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் டீன், தாளாளர்  ஷீலா ராஜேந்திரன் உள்ளிட்டோர், கேள்விக்குரிய அந்த ஆசிரியரைப் பற்றியோ அல்லது இப்படியான புகாரோ இதுவரையில் தங்களின் பார்வைக்கு வரவில்லை என்றும், தற்போது எழும் புகார்களில் குறிப்பிடப்படுவது மாதிரியான குற்றச் செயல்களை பூச்சிய அளவிலும் பள்ளி நிர்வாகம் ஏற்காது என்றும்,  அதே சமயம் தங்களது மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட தங்கள் நிர்வாகம் இதுகுறித்து தகுந்த விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிகைக்கள் எடுக்குமென்றும் குறிப்பிட்டுள்ளனர்.

lakshmi priya Chinmayi comments over chennai school issue

ஆனால் அந்த ஆசிரியர் மீதான புகார்கள் பின்வருமாறு நிற்கின்றன. அதாவது ஆபாசப் படங்களை அனுப்புதல், மாணவர்களின் தோற்றத்தைப் பற்றி ஆபாசமாகப் பேசுவது, பாலியல் ஈர்ப்பு நோக்கங்கள் நிறைந்த நகைச்சுவைகளை மாணவர்களுக்கு சொல்வது, வழக்கமில்லாத நேரத்தில் மாணவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் செய்வது, தேவையின்றித் தொடுவது, மற்றும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும்போது அநாகரிகமாக தோன்றுவது உள்ளிட்டவை நடப்பதாக அந்த ஆசிரியர் மீது புகார்கள் வரிசைகட்டி எழுந்துள்ளன.

இதனிடையே அந்த ஆசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்யக் கோரி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளி டீனுக்கு புகார் கடிதம் எழுதி, இது குறித்து விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். 

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.மேலும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பாடகி சின்மயி, இளம் திரைப்பட நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கோரியுள்ளனர்.

இந்நிலையில் இளம் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி தமது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பேசும்போது, “ஓ, இப்போது இதுவும்!! பல தசாப்தங்களாக நடந்து வரும் இந்த வகையான நடத்தை பற்றி பள்ளி எப்படி அறியாமல் இருந்திருக்க முடியும்? ராஜகோபாலன் மற்றும் பள்ளி மீது உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று அனைவரும் கோருங்கள் மற்றும் நம்புவோமாக!!” என தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் முதலில் திரையரங்கில் வெளியாகி, தற்போது அமேசான்  ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் கர்ணன் படத்தில் தமது சிறப்பான நடிப்புக்காக பாராட்டப்பட்டார்.

விஸ்வரூபம் எடுக்கும் ஆசிரியர் மீதான 'பாலியல்' குற்றச்சாட்டு'! - வலுக்கும் பிரபலங்களின் குரல்! வீடியோ

மற்ற செய்திகள்

Lakshmi priya YG Mahendran talks over chennai school issue

People looking for online information on Lakshmi Priyaa Chandramouli, Yg mahendran will find this news story useful.