ஜீ தமிழ் சூப்பர் மாம் எனும் நிகழ்ச்சியின் சீசன் 3-ல் பிரபல அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் இதுவரை சொல்லாத உருக்கமான பல சீக்ரெட்களை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Also Read | Thunivu : ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்து போன துணிவு வில்லன் Excusive
நடிகை குஷ்பு விருந்தினராக அமைந்த இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் ஜாரா தொகுத்து வழங்கினர். இதில், தன் மகள் கிருத்திகாவுக்கு அனைவர் முன்னிலையிலும் சில ரகசியங்களை பகிர்ந்தார் லக்ஷ்மி ப்ரியா.
முன்னதாக தன் மகளிடம், “அம்மா சொல்ல போகும் எதையும் கேட்டு என்னை வெறுத்துவிட மாட்டாய் என நம்புகிறேன்” என கூறிவிட்டு தனி அறைக்கு சென்றார். அங்கிருந்து தன் மகளை பார்த்து பேசியவர், “கிருத்திகா நான் உன்னை ஒன்றரை வயசுல விட்டுட்டு போய்விட்டேன்மா..
காரணம் வேலை இல்ல.. தனிமை.. சின்ன வயசுலயே கல்யாணம் அதனால் வந்த பொறுப்பு சுமைகள், அதன் காரணமாக விளைந்த டிப்ரஷனாக இருக்கலாம். நீண்ட நாட்களாகவே என் மனதில் எதிர்மறைகள் மட்டுமே மேலோங்கி இருந்தன. ஏதேனும் விபரீத முடிவுகளை பற்றியே சிந்தித்தேன்.
பின்னர் திரும்பி வந்தேன் ஒருநாள், கணவரிடம் உதவி கேட்டேன். இடையில் எனக்கு பைபோலார் டிஸ் ஆர்டர். அம்மா பைத்தியம்னு நெனைச்சிருவாளானு நினைச்சேன். ஆனால் உனக்காக மட்டும்தான் நான் வந்தேன் கிருத்திகா.” என உருக்கமாக அழுதார். அவர் பேசியதை கேட்டு அவரது மகளும் அழுதார்.
Also Read | Varisu : ‘எல்லா இடமும் நம்ம இடம்தான்!’ - ரிலீஸ்க்கு முன் ‘வாரிசு’ படம் பார்க்கும் விஜய்..?!