ஆஹா, இந்த மீட்டிங் எப்போ?.. லைலாவுடன் விஜய் சேதுபதி.. "சும்மாவா 'சிரிப்பழகி'ன்னு பேரு வெச்சாங்க.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், நந்தா, பிதாமகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை லைலா.

Advertising
>
Advertising

எப்போதும் முகம் முழுக்க சிரிப்பும், உற்சாகமும் நிறைந்து இருக்கும் லைலாவுக்கு சிரிப்பழகி என்ற பெயரும் உண்டு.

கடந்த 2006 ஆம் ஆண்டு, தனது காதலரை திருமணம் செய்து கொண்ட லைலா, அதன் பிறகு, திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார்.

மீண்டும் நடிப்பில் என்ட்ரி..

இதனிடையே, சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வந்த லைலா, தற்போது கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கி இருந்த PS மித்ரன், சர்தார் படத்தையும் இயக்கி வருகிறார்.

இதில், கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். அதே போல, நடிகர் 'டாப் ஸ்டார்' பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, 'Behindwoods' நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றிலும், பிரசாந்துடன் கலந்து கொண்ட லைலா, பார்த்தேன் ரசித்தேன் படத்தின் போது, நடந்த பல சம்பவங்களை நினைவு கூர்ந்திருந்தார்.

விஜய் சேதுபதியுடன் லைலா..

இன்றும், முன்பு போலவே முகம் முழுக்க உற்சாகத்துடன் காணும் லைலாவை பற்றி ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியுடன் லைலா இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.


இது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லைலா, "உங்களை சந்திப்பதில் எப்போதும் மிகுந்த மகிழ்ச்சி தான்" என விஜய் சேதுபதியை குறிப்பிட்டு கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

ஆஹா, இந்த மீட்டிங் எப்போ?.. லைலாவுடன் விஜய் சேதுபதி.. "சும்மாவா 'சிரிப்பழகி'ன்னு பேரு வெச்சாங்க.." வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Laila latest photo with vijay sethupathi gone viral

People looking for online information on சிரிப்பழகி, Laila, Sardar, Vijay Sethupathi will find this news story useful.