தமிழ் சினிமாவில் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நடிகை யார் என கேட்டாலே, பலரின் நினைவுக்கு வருவது நடிகை லைலா தான்.
பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், நந்தா, பிதாமகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள லைலாவுக்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பழகி என்ற பட்டப் பெயரும் உண்டு.
படத்தில் வரும் காட்சிகளிலும் சரி, இயல்பாக இருக்கும் போதும் சரி, லைலாவின் முகம் எப்போதும் சிரிப்புடனும், உற்சாகத்துடனும் தான் நிறைந்து இருக்கும்.
சர்தார் படத்தில் ரீ என்ட்ரி
கடந்த 2006 ஆம் ஆண்டு, தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட லைலா, அதன் பிறகு, திரைப்படங்கள் எதிலும் பெரிதாக நடிக்காமல் இருந்து வந்தார். இதற்கு மத்தியில், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் தோன்றி இருந்தார் லைலா. இதனையடுத்து, கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் 'சர்தார்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் லைலா நடித்து வருகிறார்.
லைலா பகிர்ந்த புகைப்படம்
இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கி இருந்த PS மித்ரன், சர்தார் படத்தையும் இயக்கி வருகிறார். இதில், கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை லைலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
சென்னையில் கிடைத்த அன்பு
தமிழ்நாட்டு பெண் ஒருவர் தனக்கு மல்லிகை பூ கொடுத்ததை புகைப்படமாக எடுத்து, இன்ஸ்டாவில் பகிர்ந்த லைலா, அதன் கேப்ஷனில், "சென்னையில் எனக்கு கிடைத்த அன்பு, ஈடு இணையற்றது. இந்த அழகான பெண் எனக்கு மல்லிகை பூ கொடுத்தார். தமிழ் குடும்பம் எனக்கு அளித்த அன்பிற்கு நன்றி. மீண்டும் ஒரு முறை உங்களை நேசிக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், விஜய் சேதுபதியுடன் லைலா எடுத்துக் கொண்ட புகைப்படமும், டாப் ஸ்டார் பிரசாந்துடன் இணைந்து Behindwoods நேர்காணல் ஒன்றில் லைலா கலந்து கொண்ட நிகழ்ச்சியும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8