நயன்தாராவின் 75-வது திரைப்படம்.. மாஸ் வீடியோவுடன் வெளியான புதுப்பட அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாராவின் 75 வது படம் பற்றிய புது விவரங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | கமல்ஹாசன் நடித்த விக்ரம்.. அணுஅணுவாக பாராட்டி விமர்சனம் செய்த அல்போன்ஸ் புத்திரன்!

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன்  பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.  இவர் கடைசியாக தமிழில் அண்ணாத்த,O2, காத்துவாக்குல ரெண்டு காதல்  படங்களில் காணப்பட்டார்.

தற்போது சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லியின் படம், அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படங்களில் நடிக்கிறார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கு சென்று ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தாய்லாந்து பேங்காக் நகருக்கு தேனிலவிற்கு சென்று திரும்பினர்.

இந்தியா திரும்பியதும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது நயன்தாரா மும்பையில் உள்ளார். நயன்தாரா, ஒரு விளம்பர பட படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இன்று நயன்தாரா நடிக்கும் 75 வது படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நயன்தாரா உடன் ஜெய் & சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி ஸ்டூடியோ, Trident Arts & நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கவுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது.

 

Also Read | ரன்பீர் கபூருடன் செம்ம டான்ஸ் ஆடிய DD.. அப்பறம் செஞ்சது தான் ஹைலைட்! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lady Super Star Nayanthara 75th Movie Announcement Video

People looking for online information on Lady Super Star Nayanthara, Nayanthara, Nayanthara 75th Movie, Nayanthara 75th Movie Updates will find this news story useful.