#VIRAL VIDEO - அனிருத்தின் 'வாத்தி' சேலஞ்... செம 'குத்தாட்டம்' போட்ட 'சாந்தனு' மற்றும் மனைவி...!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, சிம்ரன், கைதி வில்லன் அர்ஜுன் தாஸ், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது.

அனிருத்தின் சேலஞ்சை ஏற்ற சாந்தனு மற்றும் கீக்கி வெளியிட்ட டான்ஸ் வீடியோ l Santhanu And Kiki accepts Anirudh Challenge On Vij

இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகி உள்ளது. உடனே விஜய் ரசிகர்கள் #Mastersecondsingle என ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் விஜய் ஆடும் அந்த ஸ்டெப்பை 6 முதல் 60 வரை டான்ஸ் ஆடி ட்ரெண்ட் செய்கிறார்கள்.

அந்த வழியில் நடிகர் அனிருத் 'வாத்தி ஸ்டெப்" போட்டு வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது. அதற்கு கீழ் அவர் சிலரை டேக் செய்து சேலஞ் செய்தார்.

அந்த சேலஞ்ஜை ஏற்று நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி வீடியோ வெளியிட்டுள்ளனர். இருவருமே மிகச் சிறந்த டான்சர்ஸ் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அந்த வீடியோ, இப்போது செம வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

அனிருத்தின் சேலஞ்சை ஏற்ற சாந்தனு மற்றும் கீக்கி வெளியிட்ட டான்ஸ் வீடியோ l Santhanu And Kiki accepts Anirudh Challenge On Vij

People looking for online information on Anirudh, Kiki, Master, Shanthanu Bhagyaraj, Vijay will find this news story useful.