நடிகர் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பிற்காக நெய்வேலியில் இருந்தபோது அவரிடம் வருமான வரித்துறையினர் சம்மன் அளித்ததாக கூறப்பட்டது. மேலும் நடிகர் விஜய்யை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகவும் விஜய்யிடம் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை எனவும் கூறப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பிகில் படத்தயாரிப்பாளர் மற்றும் பிரபல தயாரிப்பாளரும் ஃபைனான்ஸியருமான அன்பு செழியன் ஆகியோர் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடைபெற்றது. இந்த செய்திகள் சில தினங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு ரசிகர்கள் படையெடுக்கத் தொடங்கினர். அப்போது வேன் ஒன்றின் மேல் ஏறி நின்ற விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த செல்ஃபி வெளியாகி வேற லெவல் வைரலானது.
தற்போது மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பண்ணையூரில் உள்ள விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இது ரெய்டு இல்லையென்றும், முன்பு பிறப்பித்திருந்த தடை ஆர்டரை கேன்சல் செய்யவே வந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போதைய முக்கிய செய்தி என்னவென்றால் நடிகர் விஜய்யின் சம்பள விவரத்தை வருமான வரித்துறையினர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ளது . அதாவது "பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார்" என்று சொல்லப்படுகிறது. "இரண்டு திரைப்படங்களின் வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார்" என்று கூறியுள்ளனர். இந்த செய்தி தளபதி ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.