“GET READY”…. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன் – வைரலாகும் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றுள்ள டூ டுட்டு டூ  பாடலின் புதிய வீடியோ கிளிம்ப்ஸ் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

”மனச அங்கயே இருக்கு”… இன்னும் மறக்க முடியல போல…. திவ்யபாரதி வைரல் போஸ்ட்

மாடர்ன் முக்கோணக் காதல்…

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீசாக உள்ளது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டைட்டானிக் போஸ்டர் ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

காதீஜாவா? கண்மணியா?.....

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடிக்கிறார்.  சமீபத்தில் வெளியான டீசரில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரிடமும் விஜய் சேதுபதி தனது காதலை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் காட்சி ரசிகர்களைக் கவர்ந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் அறிவித்தனர்.

படப்பிடிப்பும் டப்பிங்கும்…

முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களைப் பகிர்ந்து ‘இதை சாத்தியமாக்கிய கடவுளுக்கு நன்றி.’ எனக் கூறியீருந்தார். அதன் பின்னர் விக்னேஷ் சிவன் டப்பிங் பேசும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

Two two two glimpse…

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள Two two two என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த பாடலின் வீடியோ நடிகர் நடிகைகள் யாரும் இல்லாமல் இசையமைப்பாளர் அனிருத் தோன்றியிருந்தார். அதையடுத்து அந்த பாடலின் புதிய glimpse வீடியோ விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். புதிதாக வெளியாகும் வீடியோவில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.

கமலின் சூப்பர் ஹிட் படத் தலைப்பில் சதீஷின் அடுத்த படம்… சிம்பு வெளியிட்ட exciting போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

KVRK two two two song new video glimpse release update

People looking for online information on Kaathu Vaakula Rendu Kadhal, KVRK, KVRK two two two song, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.