“ ARE YOU READY”…. KVRK படத்தின் செம்ம அப்டேட்டை வெளியிட்ட பிரபல இசை நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஹிட் பாடலான டூ டூ டூ –வின் லிரிக் வீடியோ வெளியீடு பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

”எல்லோமே மாறும்”… ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ்... இளையராஜா பகிர்ந்த பாடல்!

காத்து வாக்குல ரெண்டு காதல்…

இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீசாக உள்ளது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டைட்டானிக் போஸ்டர் ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

முக்கோணக் காதல் கதையா?

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது விஜய் சேதுபதி இருவரையும் காதலிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது சமீபத்தில் வெளியான டீசரில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரிடமும் விஜய் சேதுபதி தனது காதலை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் காட்சி ரசிகர்களைக் கவர்ந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் அறிவித்தனர்.

Two two two glimpse…

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள Two two two என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. அந்த பாடலின் வீடியோவில் நடிகர் நடிகைகள் யாரும் இல்லாமல் இசையமைப்பாளர் அனிருத் தோன்றி நடனமாடி கலக்கி இருந்தார். இதனால் இந்த பாடலில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோரைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ள சோனி நிறுவனம் அதுபற்றிய அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது. நாளை இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகும் என அறிவித்துள்ளது. இதில் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மூவரும் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

பீஸ்ட் FDFS: "நெல்சன் சொன்னத விட"… "தளபதி இறங்கி கலாய்க்குறாரு" - Beast Public Review!

தொடர்புடைய இணைப்புகள்

KVRK movie Two two two song glimpse releasing tomorrow

People looking for online information on KVRK movie, Nayanthara, Samantha, Two two two song glimpse, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.