தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு .
தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர். கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து அங்கையற்கண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். விஜய்யின் வாரிசு படத்திலும் குஷ்பு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் சுந்தர்.சியை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கோண்ட குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
2010 ஆம் ஆண்டு முதல் 2014-வரை திமுக கட்சியில் இருந்த குஷ்பு பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2020 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, தற்போது பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆக வலம் வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு குஷ்பு தோல்வி அடைந்தார்.
சமீபத்தில் மத்திய அரசு, நடிகை குஷ்புவை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்தது.
இந்நிலையில் நடிகை குஷ்பு, நடிகர் பிரபு & இயக்குனர் பி. வாசு உடன் இருக்கும் புகைப்படத்தை, சின்னத்தம்பி படத்தின் 32-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சின்னதம்பி படம் வெளிவந்து 32 வருடங்கள் ஆனதை நம்ப முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன். என் இதயம் எப்போதும் பி.வாசு சார் & பிரபு சாருக்காக துடிக்கும். இளையராஜா சாரின் ஆன்மாவைக் கிளர்ந்தெழச் செய்த இசைக்காக என்றும் நன்றியுடன் இருப்பேன், படத்தினை தயாரித்த மறைந்த கே.பாலுவுக்கு என்றும் நன்றி.
நந்தினி கதாபாத்திரம் அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் பதிந்துள்ளார். மீண்டும் ஒருமுறை நன்றி." என குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.