CSK கேப்டன் தோனியை சந்தித்த நடிகை குஷ்பு.. டிரெண்டாகும் வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில்  பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு .

Advertising
>
Advertising

தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர். கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து அங்கையற்கண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். விஜய்யின் வாரிசு படத்திலும் குஷ்பு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சுந்தர்.சியை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கோண்ட குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

2010 ஆம் ஆண்டு முதல் 2014-வரை திமுக கட்சியில் இருந்த குஷ்பு பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2020 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, தற்போது பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆக வலம் வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு குஷ்பு தோல்வி அடைந்தார். சமீபத்தில் மத்திய அரசு, நடிகை குஷ்புவை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்தது.

இந்நிலையில் நடிகை குஷ்பு, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த சமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kushbu Shared Her Image with CSK Captain MS Dhoni

People looking for online information on CSK, Khushbu, MS dhoni will find this news story useful.