நடிகை குஷ்பு மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர் என்பது பலரும் அறிந்த விஷயம். இந்நிலையில் அவர் ஊடகங்களை பற்றி தவறாக பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியானதாக கூறப்படுகிறது.
அந்த ஆடியோவை குறித்து நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் "நான் பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டது. அது தயாரிப்பாளர் குரூப்பில் இருந்து பகிரப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தி உள்ளவர்கள் இருப்பதை நினைத்து அவமானமாக இருக்கிறது. எனது நோக்கம் ஊடகத்தை மரியாதை குறைவாக பேசுவது இல்லை. நண்பர்களுடன் பேசும் தொனியில் தான் பேசினேன்.
எனது 34 வருட சினிமா வாழ்க்கையில் ஒருமுறை கூட ஊடகத்துறையினர் முன் நான் மரியாதை இல்லாமல் பேசியது கிடையாது. அந்த வாய்ஸ் மெசேஜ் பாதியில் இருக்கிறது. ஆனால் அதனால் யாராவது புண்பட்டிருந்தால், எனது மன்னிப்புகள்.
துரதிர்ஷ்டவசமாக நீங்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அவர்களே தான் உங்களை முதுகில் குத்த தயாராக இருக்கிறார்கள். எந்த தயாரிப்பாளர் இதை செய்தார் என்று எனக்கு தெரியும். ஆனால் அவரது பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. எனது பொறுமையும் மன்னிப்பும் அவருக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது" என்று கூறியுள்ளார்.