இந்த கொரோனா வைரஸ் லாக்டவுன் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிய கேள்விக்குள்ளாக்கியுள்ளது. வழக்கமாக மிகவும் கிராண்டாக நடைபெறும் பிரபலங்களின் திருமணங்கள் கூட மிக எளிமையான முறையில் நடைபெற்று வருகின்றன.
பாஸ் என்கிற பாஸ்கரன், கும்கி உள்ளிட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருந்த அஸ்வினுக்கும் வித்யா ஸ்ரீ என்பவருக்கும் சமீபத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஸ்வின் தனது மனைவி வித்யா ஸ்ரீயுடன் Behindwoods TVக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது லாக்டவுன் திருமணம் குறித்து பேசிய அவர், இது மிகவும் புதுசா இருந்துச்சு. எல்லா வேலைகளையும் நாங்களே செய்ய வேண்டியிருந்தது. லைவ் போட்டோம். எல்லோரும் பார்த்து வாழ்த்தினாங்க. இந்த சூழ்நிலை அப்படி இருக்கு. அதனால எல்லோரையும் கூப்பிட முடியல என்றார்.