மீண்டும் உருவாகும் ஜெண்டில்மேன்-2! ரசிகர்களுக்கு செம்ம GAME-ஐ அறிவித்த தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்கள் தயாரிப்பதில், அவற்றை பிரமாண்டமாக விளம்பரபடுத்துவதில் புகழ்பெற்று விளங்கியவர் மெகா தயாரிப்பாளர் ' ஜென்டில்மேன்' கே.டி.குஞ்சுமோன். அவர் தயாரிப்பில் உருவாகவுள்ள, ' ஜென்டில்மேன் 2 ' படத்தின் இசையமைப்பாளர் யாரென கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசு பரிசு அறிவித்துள்ளார்.

KT Kunjumon Starting New Movie Gentle Man Part 2
Advertising
>
Advertising

தமிழ் சினிமாவில் முன்னணி  தயாரிப்பாளராக வலம் வந்தவர். சரத்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் முதல் பல ஜாம்பவான்களை திரையுலகில் உருவாக்கிய பெருமை அவரையே சேரும். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் அவற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். அதன் ஆரம்பத்தையே  அதிரடியான அறிவிப்புடன் செய்து,  அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

KT Kunjumon Starting New Movie Gentle Man Part 2

தற்போது ஜென்டில்மேன் 2 படத்தின் ஆரம்பகட்ட பணிகளை துவக்கியுள்ளார். இப்படத்தின் இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் எவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போது ரசிகர்களுக்கு இதனை ஒரு போட்டியாக அறிவித்து அசத்தியுள்ளார்.

வாடகை தாய் மூலம் குழந்தை? திடீரென அறிவிப்பு செய்த உலக அழகி பிரியங்கா சோப்ரா! முழு தகவல்

விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் அவர் யாரென சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படவுள்ளது. படத்தின் மற்ற குழுவினர் அறிவிப்பும் இவ்வாறே நிகழவுள்ளது. எல்லாவற்றிலும் புதுமையையும் பிரமாண்டத்தையும் கையாளும் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அவர்கள், ஜென்டில்மேன்2 படத்திலும் பிரமாண்ட அறிவிப்புகளை துவங்கியிருப்பது,  ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே  பாராட்டை குவித்து வருகிறது.

என்ன ரெடியா? பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் தரும் ஸ்ருதிஹாசன்!

 

மற்ற செய்திகள்

KT Kunjumon Starting New Movie Gentle Man Part 2

People looking for online information on கே.டி.குஞ்சுமோன், ஜென்டில்மேன் 2, Gentle Man Part 2, KT Kunjumon will find this news story useful.