'நாட்டாமை', 'முத்து', 'படையப்பா', 'வில்லன்', 'வரலாறு', 'அவ்வை சண்முகி', 'பஞ்சதந்திரம்' என தமிழ் சினிமாவில் எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
இவர் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்து, மிகப்பபெரிய ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநராக மாறியது வரை தன் வாழ்வில் பல்வேறு பரிணாமங்கள் குறித்து Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், படையப்பா படத்தை படமாக்கும் போது சில சீன்கள் கூடுதலாக எடுத்தோம். பின்னர் எடிட்டிங் செய்து பார்க்கும் போது 14 ரீல் இருந்தது. இதுகுறித்து ரஜினியிடம் தெரிவித்தபோது, அவர் எந்த சீனுமே தேவையில்லாமல் இல்லை. அதனால் இருக்கட்டும் என்றார்.
பின்னர் ரஜினி, கமலிடம் ஃபோன் செய்து ரெண்டு இன்டர்வல் விட போறேனு சொல்லிருக்காரு. உடனே கமல், பைத்தியமா உனக்கு ? அதெல்லாம் தமிழ் படத்துக்கு தாங்காதுபா. அவர் கூட நான் அவ்வை சண்முகி வொர்க பண்ணிருக்கேன். அவர பத்தி எனக்கு தெரியும். நீ அவர் கிட்ட விட்ரு. ஏன்னா நீ நடிச்சதுனால எல்லா சீனும் நல்லா இருக்க மாதிரி தெரியும். என சொல்லியிருக்கிறார்.