பாகுபலி பிரபாஸூடன் காதலா? பரவிய வதந்திக்கு விளக்கமளித்த நடிகை க்ரித்தி சனோன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி பிரபாஸை நடிகை க்ரித்தி சனோன் காதலிப்பதாக பரவிய வதந்திக்கு நடிகை க்ரித்தி சனோன் விளக்கமளித்துள்ளார்.

Advertising
>
Advertising

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு பரந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார். பாகுபலி படங்களுக்கு பின்னர் ஆக்சன் படமான 'சாஹோ' & கடந்த மார்ச் மாதம்  காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வெளிவந்த 'ராதே ஷியாம்' படத்தில்  நடித்திருந்தார். 

தற்போது பிரபாஸ் அடுத்து நான்கு பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள 'ப்ரோஜெக்ட் கே'  படம், 'ஆதி புருஷ்' மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் 'சலார்', சந்திப் ரெட்டி வாங்காவுடன் 'ஸ்பிரிட்'  படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.

சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் ஆதி புருஷ் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் புராணத் திரைப்படம் 'ஆதி புருஷ்'.

இப்படத்தில் நடிகர் பிரபாஸ்  நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷன் குமார், ஓம் ராவத், பிரசாத்  சுடர், ராஜேஷ் நாயர் ஆகியோர்  தயாரித்திருக்கிறார்கள்.

'ஆதி புருஷ்' இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஆதிபுருஷ் வரும் ஜூன் 16, 2023 அன்று வெளியாகிறது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸை நடிகை க்ரித்தி சனோன் காதலிப்பதாக வதந்திகள் பரவின. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை க்ரித்தி சனோன் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "அது பியாரோ (காதல்) அல்லது PR-யோ இல்லை.. ஒரு ரியாலிட்டி ஷோவில் (காஃபி வித் கரண்) எங்கள் பேடியா  நடிகர் வருண் தவான் கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டார். மேலும் அவரது வேடிக்கையான கேலிகள் சில அலறல் வதந்திகளுக்கு வழிவகுத்து விட்டது. சில போர்ட்டல்கள் எனது திருமண தேதியை அறிவிக்கும் முன்- உங்கள் வந்ததிகளுக்கு விளக்கமளிக்கிறேன். அந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை! போலி செய்திகள்." என க்ரித்தி சனோன் விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kriti Sanon Instagram Story about dating rumours with Prabhas

People looking for online information on Adi Purush, Kriti Sanon, Prabhas will find this news story useful.