PAN INDIAN '3D' படத்தில் நடிக்கும் மின்னல் முரளி ஹீரோ.. முதல் முறையாக ஜோடி சேரும் பிரபல தெலுங்கு நடிகை!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் டோவினோ தாமஸ்.

Advertising
>
Advertising

Also Read | Biggboss6 Tamil : "நீங்க ஒண்ணும் பிக்பாஸ் கெடையாது".. 'டீ' பேர்ல வெடிச்ச சண்டை!!.. ரணகளம்!!

அவர் நடித்திருந்த ABCD, கப்பி, கோதா, தீவண்டி உள்ளிட்ட பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அவரை பிரபலம் ஆக்கி இருந்தது. மேலும் தனுஷ் நடிப்பில் தமிழில் உருவாகி இருந்த மாரி 2 திரைப்படத்தில் டோவினோ தாமஸ் வில்லனாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் "மின்னல் முரளி" என்ற திரைப்படம், டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி இருந்தது.

பாசில் ஜோசப் இயக்கி இருந்த இந்த திரைப்படம், சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்டதாகும். மேலும் மின்னல் முரளி, தென் இந்தியாவின் சிறந்த சூப்பர் ஹீரோ படங்களில் ஒன்று என்ற பாராட்டையும் சர்வதேச அளவில் பெற்றிருந்தது.

இதன் பின்னர், 'வாஷி', 'தள்ளுமால' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் டோவினோ தாமஸ் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பேன் இந்தியன் திரைப்படத்தில் டோவினோ தாமஸ் நடிக்க உள்ள படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது.

"அஜயந்தே ரண்டாம் மோஷனம் (Ajayante randam Moshanam)" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், முதல் முறையாக மூன்று வேடங்களில் டோவினோ தாமஸ் நடிக்க உள்ளார். அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இந்த படத்தை இயக்குகிறார். மூன்று காலகட்டங்களில் இந்த படத்தின் கதை நிகழ்வதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், மணியன், அஜயன் மற்றும் குஞ்சிக்கேளு ஆகிய கதாபாத்திரங்களில் டோவினோ நடிக்க உள்ளார்.

சுஜித் நம்பியார் கதை மற்றும் திரைக்கதை எழுதி உள்ள இந்த படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. பேன் இந்தியன் திரைப்படமாக அஜயந்தே ரண்டாம் மோஷனம் உருவாக உள்ள நிலையில், இதனை 3டி-யில் வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டோவினோ தாமஸுடன் நடிகைகள் கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்ஷ்மி, பாசில் ஜோசப், கிஷோர், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

மேலும், பிரபல தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டியின் முதல் மலையாள படம் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் திரைக்கதை கேரளாவின் களரி எனும் தற்காப்புக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால், நடிகர் டோவினோ பிரத்யேகமாக களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Also Read | "ஒரு காலத்துல பெரிய ஹீரோயின்".. தெருக்களில் யாசகம் செய்யும் 'சக்திமான்' நடிகை!!

தொடர்புடைய இணைப்புகள்

Krithi shetty to pair with tovino thomas in her malayalam debut

People looking for online information on Krithi Shetty, Minnal Murali, Minnal Murali Tovino Thomas, Tovino Thomas will find this news story useful.