வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்க, யோகி பாபு, ஷாரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதை என்னுடையது என பார்த்திபனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து Behindwoods TVக்கு அளித்த பேட்டியில், கோமாளி படத்தின் கதை என்னுடையது. நான் இந்த கதையை 2014 ஆம் ஆண்டு எழுதியிருந்தேன். இந்த படத்தில் பார்த்திபன் சார் ஹீரோவாக நடிக்க வேண்டியிருந்தது. சில காரணங்களால் அப்போது பண்ண முடியவில்லை.
பின்னர் நான் பார்த்திபன் சாரின் ஒத்த செருப்பு படத்தில் பணிபுரிந்து வந்தேன். அப்போது தான் நண்பர்கள் மூலம் கோமாளி படம் என்னுடையது என்று தெரியவந்தது. இதனையடுத்து எழுத்தார்கள் சங்கத்தில் குற்றச்சாட்டை பதிவு செய்த போது, பாக்யராஜ் சார் இரண்டு கதைகளையும் ஒப்பிட்டு பார்த்து கோமாளி என்னுடைய கதை தான் என்று சொன்னார்.
இதனையடுத்து கோமாளி படத் தயாரிப்பாளர் இந்த பிரச்சனையை கேள்வி பட்டு எனக்கான அங்கீகாரத்தை கொடுக்கிறாங்க. படத்தில் என் கதையும் பிரதீப்பின் கதையும் ஒரே போன்று இருக்கிறது என்று டைட்டில் இடம் பெரும் என்று கூறினார்.