கலக்கப்போவது யாரு சரத்துக்கு விரைவில் கல்யாணமாம், பொண்ணு யாரு தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சிக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. விடுமுறை தினமான ஞாயிறன்று மதியம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை குடும்பத்துடன் அமர்ந்து கண்டு ரசிக்காத ஆட்கள் குறைவு.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வெரைட்டியான ஃபெர்பாமன்ஸ் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரபலமாகும் போட்டியாளர்கள் ரசிகர்களிடையே பிரபலமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார்கள்.

அவர்களில் சரத்தும் குறிப்பிடத்தக்கவர். அவர் ஒவ்வொருமுறையும் வித்தியாசமான உடல் மொழி , மாறுபட்ட குரல் என கவனம் ஈர்த்து வந்தார். குறிப்பாக மொட்டை ராஜேந்திரன் போல் அவர் தோன்றும் ஒவ்வொரு எபிசோடும் வேறு ரகம். இதனையடுத்து சரத் ஜீவாவுடன் இணைந்து 'கொரில்லா', 'ஜடா' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் சரத்துக்கும் அவரது காதலி கிருத்திகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அதில், வெற்றிகரமான திருமணம் என்பது ஒரே ஒருவர் மீது மீண்டும் மீண்டும் காதல் கொள்வது. சமீபத்தில் எனக்கு கிருத்திகா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

காதலியை மணக்கிறார் கலக்கப்போவது யாரு சரத் | KPY Sarath Shares his engagement photo on instagram

People looking for online information on Engagement, Instagram, KPY Sarath will find this news story useful.