"பெண் குழந்தை பிறந்து ஒரு வாரமாச்சு".. மகளுடன் இருக்கும் PHOTO போட்டு நெகிழ்ந்த KPY நவீன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் நவீன். ஏராளமான குரல்களில் மிமிக்ரி செய்து அசத்துவது தான் நவீனின் சிறப்பம்சம்.

Advertising
>
Advertising

Also Read | "கர்ப்பிணி என்ன உதைச்சு.. கல்யாணம் ஆனத சொல்ல கூடாதுனு".. கணவர் குறித்து சீரியல் நடிகை புகார்..

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த "பாவம் கணேசன்" என்னும் சீரியலிலும் நாயகனாக அவர் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது அப்பாவாக மாறி இருக்கிறார் நவீன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து தற்போது இந்த ஜோடிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இது தொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான சில கருத்துக்களையும் நவீன் குறிப்பிட்டுள்ளார். "இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை ❤️. என் பெருமைமிகு மகளை வரவேற்கிறேன். அவள் பிறந்து ஒரு வாரம் ஆகிறது, என்னை ஒரு தந்தையாக உணர வைத்துள்ளார். எப்போதும் நெகிழ வேண்டிய சிறந்த உணர்வு. ஆனால், அதே வேளையில் அவளை பார்த்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஒரு பெரும் போராட்டத்திற்கு பிறகு, தாயும் மகளும் நன்றாக இருக்கிறார்கள்.

எனது மனைவியும், மகளும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் என்னை பெருமைமிகு தந்தையாக மாற்றி உள்ளார்கள்" என நவீன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவியை டேக் செய்து நன்றி தெரிவித்துள்ள நவீன், அப்பா என நீ அழைப்பதற்காகவே என் அடுத்த காத்திருப்பு என்றும் உருக்கமாகவும் மகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் எமோஷனலாக தனது மகள் பிறந்ததை நவீன் குறிப்பிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நவீன் - கிருஷ்ணகுமாரி ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Also Read | "அவங்கதான் என்ன அடிச்சாங்க.. என் குழந்தை வேனும்" - மனைவியின் புகார் பற்றி சீரியல் நடிகர்..!!

Kpy naveen shares photo with his newborn daughter and emotional post

People looking for online information on Kpy naveen, Kpy naveen newborn daughter photo will find this news story useful.