அப்படி போடு! வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ள வந்துருக்குற KPY பிரபலம் யாரு பாருங்க BBULTIMATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 28, பிப்ரவரி 2022: தமிழின் முக்கிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் முதல் முறையாக இந்த ஆண்டு ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் ஐந்து சீசன்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது. இதில் முதல் நாள் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிம்பு என்ட்ரி

அண்மையில் விக்ரம் திரைப்பட பணிகளுக்காக நடிகர் கமல்ஹாசன் விலகிய நிலையில், இளம் நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் தொடங்கியுள்ளார். 

வைல்ட் கார்டு என்ட்ரி

இந்நிலையில் தான் கலக்கப்போவது யாரு பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் இந்த முறை பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்துள்ளார். இவரை சக ஹவுஸ்மேட்ஸ் வரவேற்கும் விதமாக முட்டை, ஷாம்பு, மஞ்சள் தண்ணீர் என சதீஷ் மீது அபிஷேகம் செய்யும் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.



தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா, தாமரை, அனிதா, அபிராமி, நிரூப், ஜூலி, தாடி பாலாஜி, சினேகன், ஸ்ருதி, சதீஷ் ஆகிய போட்டியாளர்கள் உள்ளனர். முன்னதாக எலிமினேட் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்திருக்கிறார். இவரை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரியாக சதீஷ் உள்ளே வந்திருப்பதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

KPY fame member enters in Bigboss ultimate by wild card entry

People looking for online information on BBUltimate Tamil, Bigg Boss OTT, Bigg Boss Tamil will find this news story useful.