விஜய் டிவியில் கடந்த ஞாயிறு அன்று நடந்த வருத்தப் படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியில் சீரியல் நடிகர்கள், ஆங்கர்கள், குக் வித் கோமாளி பிரபலங்கள், கலக்கப் போவது யாரு பிரபலங்கள் மற்றும் பாடகர்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய பாலாவுக்கு திடீர் சர்ப்ரைஸாக அவரது பெற்றோர் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதனால் பாலா நெகிழ்ச்சி அடைந்தார். அப்போது பேசிய பாலாவின் அம்மா பாலாவின் உண்மையான முழு பெயர் பாலன் ஆகாஷ் என்றும் 3 வயதில் 50 ஜிகே கேள்வி பதில்களை சொன்ன பாலா, பாலாவை 7 வயதில் டிரம்ஸ் க்ளாஸ்க்கு அனுப்பியதாகவும் பாலா ஷெட்டில் கார்க் ஸ்டேட் பிளேயர் என்று தெரிவித்தார். மேலும் ‘பாலாவை டாக்டராக்கனும்னு ஆசப்பட்டோம். ஆக்டர் ஆகிட்டார். இந்த பிள்ளை நீரில் போட்டா நீந்தும். நிலத்தில் போட்டா ஓடும்.’ என பாலா ஸ்டைலில் பஞ்ச் அடித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாலா, ‘ஊர்ல சிவனேனு இருந்தேன். நவீன் அண்ணா போன் பண்ணி வர சொன்னாரு. அப்படி கிடைச்ச வாய்ப்பு தான். பாலாஜி அண்ணா தான் நல்ல சட்டை, ஷூலாம் வாங்கி கொடுத்தார். கலக்கப்போவது யாரு சதீஷ் உதவி செய்தார். ஒருமுறை வடபழனி பிரிட்ஜ் ஃபிளை ஓவரில் நடந்துபோய்க் கொண்டிருந்தேன். அப்போது மா.கா.பா அண்ணன் போன் பண்ணிம் எங்கடா இருக்கனு கேட்டார். நான் சொன்னேன். பிறகு மா.கா.பா அண்ணன், ஒரு சூட்கேஸ் நிறைய டிரெஸ் வாங்கி சரத்திடம் கொடுத்து என்னிடம் கொடுக்க சொன்னார்.” என்று நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி சொல்லி உருகினார்.
தொடர்ந்து பேசிய பாலார், “பாலா வந்துட்டான் மேலனு யாரும் சொல்ல தேவையில்ல. பாலா அவ்ளோதான் போலனு சொல்லாம இருந்தா போதும்.” என கூறினார். முன்னதாக பாலா, தன் அம்மா பூங்குழலி தையல் தொழில் செய்வதாகவும், தன் தந்தை ஜெகந்நாதன் பெட்ரோல் பங்கில் நிர்வாக மேலாளராக இருப்பதாகவும் அறிமுகப்படுத்தி தமது தாய்மாமா தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.