கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை மற்றும் மாடல் அழகி ஒருவர், மர்மமான முறையில் இறந்து போயுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | DON: போடு! சிவகார்த்திகேயனின் 'டான்' படத்துல இவ்ளோ ரஜினி REFERENCE இருக்கா.? அள்ளுதே.!
கேரள மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சஹானா. முழு நேர மாடலாகவும், அவ்வப்போது நடிகையாகவும் வலம் வரும் இவர், தனது கணவருடன் கோழிக்கோட்டை அடுத்த பரம்பில் பஸார் என்னும் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
சஹானாவுக்கும், சஜ்ஜாத் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமும் நடைபெற்றுள்ளது.
மரணத்திற்கு பின் மர்மம்?
இந்நிலையில், தான் தங்கி இருந்த வீட்டின் ஜன்னல் கம்பியில், மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்து கிடந்துள்ளார் சஹானா. கணவருடன் பரம்பில் பஸார் பகுதியில் வாழ்ந்து வந்த நடிகை சஹானாவுக்கு நேர்ந்த நிலை, பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.
தொடர்ந்து, சஹானா மரணம் தொடர்பாக கணவர் சஜ்ஜாத்தை போலீசார் கஸ்டடியில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், மரணத்திற்கான காரணம் குறித்து, சஹானாவின் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்படி எதுவும் பண்றவ இல்ல..
சஹானாவின் உறவினர்களும், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மகளின் முடிவு பற்றி சஹானாவின் தாயார் பேசுகையில், "எனது மகள் எப்போதும் அவரது கணவர் மூலம் நடக்கும் கொடுமைகள் பற்றி பேசிக் கொண்டே இருப்பார். அவர் நிச்சயமாக தற்கொலை செய்திருக்க மாட்டார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, எங்களை அனைவரையும் அழைத்திருந்தார்" என தெரிவித்துள்ளார்.
மாடல் மற்றும் நடிகை சஹானாவின் முடிவு, கேரள சினிமா வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில், நடிகையின் மரணம் பின்னாலுள்ள மர்மம் விலகும் என்றும் கருதப்படுகிறது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பற்றது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8