நடிகை சமந்தா திருமணம் குறித்து முதல்முறையாக டிவி நிகழ்ச்சியில் பேசியிருக்கும் பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Also Read | ஆஹா.. கம்பேக் கொடுக்கும் 'சேது' அபிதா.. வெளியான புதிய சீரியல் ப்ரோமோ.!
சமந்தா - சைதன்யா பிரிவு:
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்துவரும் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். ஆனால் கடந்த ஆண்டு சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிவதாக சோஷியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த செய்தி அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமந்தா திரைப்பயணம்:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. முன்னதாக புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இவருடைய நடிப்பில் அண்மையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளிவந்தது. இந்த படத்தில் கதிஜா எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவருடனும் சேர்ந்து நடித்திருந்தார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
காபி வித் கரண் டிவி நிகழ்ச்சி:
இதனை தொடர்ந்து தற்போது சாகுந்தலம், யசோதா, குஷி போன்ற பல படங்களில் பிசியாகிவிட்டார். இந்த நிலையில் சமந்தா இந்தியில் பிரபலமான காபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரொமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் சமந்தா திருமணம் குறித்து கூறியிருக்கும் கருத்து வைரலாகி வருகிறது.
திருமண வாழ்க்கை கேஜிஎஃப் மாதிரி இருக்கு:
அதில் சமந்தா பேசும்போது, “திருமண வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் போக காரணமே நீங்கள் தான்(கரன் ஜோகரை குறிப்பிடுகிறார்), ஏன் என்றால் வாழ்க்கை K3G போல இருக்கும் என நீங்கள் காட்டினீர்கள். ஆனால், உண்மை என்னவென்றால், அது கேஜிஎப் போல இருக்கிறது” என பேசி இருக்கிறார். இதை சொல்லும்போது கரண் ஜோகர் திருதிருவென முழித்தார். சமந்தாவும் சிரித்துக்கொண்டே சற்று நைய்யாண்டி தொனியில் இந்த கருத்தை கூறினார்.
K3G & KGF திரைப்படங்கள்:
இதில் சமந்தா குறிப்பிடும் K3G என்பது, கரன் ஜோகர் இயக்கிய பிரபல இந்தி குடும்பத் திரைப்படமான ‘கபி குஷி கபி கம்’ படத்தை தான். 2001 -ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஷாருக் கான், ஹிரித்திக் ரோஷன், கஜோல், கரீனா கபூர், ராணி முகர்ஜி நடித்து வெளிவந்த இந்த திரைப்படம் குடும்ப உறவுகளின் பாசப்பிணைப்பை காட்டும் செண்டிமெண்ட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ரத்தமும் சதையுமாக, துப்பாக்கியும், படையுமாக ஒரு வீரன் தன் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி-அதை கட்டிக்காக்கும் கதையாக கேஜிஎஃப் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி வரவேற்பையும் வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | நடிகர் சோனு சூட்டிற்கு தனது தங்க பதக்கத்தை அர்ப்பணித்த கராத்தே சாம்பியன்.!