KOFFEE WITH KARAN 7: 'ஓ சொல்றியா மாமா' பாட்டுக்கு அக்ஷய் குமார் & சமந்தா வைரல் டான்ஸ்.. வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வேற லெவலில் ஹிட்டடித்த 'ஓ அண்டவா மாமா' பாடலுக்கு, சமந்தா மற்றும் அக்ஷய் குமார் நடனமாடிய வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | சந்திரமுகி-2 படத்துல ஹீரோயின் இவங்களா? ஆஹா அப்போ வேறலெவல் சம்பவம் கன்பார்ம்!

ஹிந்தியில் 'காஃபி வித் கரண்' என்னும் நிகழ்ச்சி, அதிக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஆகும். இதனை பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வருகிறார். பல பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் அடுத்ததாக நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இது தொடர்பான ப்ரோமோக்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். முன்னதாக, புஷ்பா படத்தில் வரும் 'ஓ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு அல்லு அர்ஜூனுடன் இணைந்ந்து சமந்தா ஆடி இருந்தது, சர்வதேச லெவலில் ஹிட்டாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது யசோதா, குஷி, ஷகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் சமந்தா நடித்து வருகிறார். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், பாலிவுட் நடிகர் அக்ஷய்  குமாருடன் இணைந்து, காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டார். இது தொடர்பான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதில், திருமணம் குறித்து சமந்தா பேசும் காட்சிகளும், சமந்தாவை தூக்கிக் கொண்டே அக்ஷய் குமார் என்ட்ரி கொடுக்கும் காட்சிகளும்.இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் தான், தற்போது புது ப்ரோமோ ஒன்றையும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. அதன்படி, சமந்தா மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர், ஓ அண்டவா மாமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரியல் வீடியோவில், அல்லு அர்ஜூனுடன் ஆடிய அதே ஸ்டெப்பை, அக்ஷய் குமாருடன் மீண்டும் போட்டு அசத்தி உள்ளார் நடிகர் சமந்தா.

காஃபி வித் கரணில், அக்ஷய் குமார் மற்றும் சமந்தா கலந்து கொண்ட நிகழ்ச்சி, ஜூலை 21ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | அடடே நஸ்ரியா நடத்துன போட்டோஷூட்.. அதுலேயும் ரசிகர்களிடம் அவங்க கேட்ட கேள்வி செம ஹைலைட்!

தொடர்புடைய இணைப்புகள்

Koffee with Karan 7 Akshay kumar samantha oo antava dance

People looking for online information on Akshay Kumar, Akshay kumar samantha oo antava dance, Koffee with Karan, Koffee With Karan 7, Oo antava dance, Samantha, Samantha ruth prabhu will find this news story useful.