இது வேற லெவல்... பிரேம்ஜி, கெளதம் மேனன், விஜய் ஆண்டனி சேர்ந்து பாடிய VIRAL பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய நடிகரில் விஜய் ஆண்டனியும் ஒருவர். 

வித்யாசமான படத்தலைப்புகளை வைத்து திரைக்களத்தில் களமாடி வருகிறார். சிறந்த இசைமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி 'நான்', என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

திரைக்கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களைத் தேர்ந்தெடுத்து 'சலீம்',  'பிச்சைக்காரன்', 'கொலைகாரன்', போன்ற வெற்றிப்படங்கள் இவருக்கு தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்து கொடுத்தது என்றே சொல்லலாம். இதை தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'கோடியில் ஒருவன்'.

இந்த படத்தை அனந்த கிருஷ்னன் இயக்க விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். ஹிப் பாப் தமிழாவின் 'மீசையை முறுக்கு' படத்திற்கு பிறகு நடிகை ஆத்மிகா நடிக்கும் இரண்டாவது படம் இது. எற்கனவே இந்த படத்தின் டீஸர், ட்ரைலர், இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி டியூஷன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது மூன்றாவது பாடலான slum anthem என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், பிரேம்ஜி மற்றும் விஜய் ஆண்டனி, நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளனர். இப்பாடல் தற்போது பலராலும் பார்க்கப்பட்டு அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Kodiyil oruvan movie song slum anthem Release

People looking for online information on Kodiyil Oruvan, Vijay Antony will find this news story useful.