BEAST படத்துக்கு போறவங்களுக்கு லீவ், FREE TICKET..நிறுவனம் அறிவிப்பு..ஜாலியோ ஜிம்கானா மோடில் ஊழியர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏப்ரல் 13 (நாளை) வெளியாக இருக்கும் நடிகர் விஜய்-ன் பீஸ்ட் திரைப்படத்திற்கு செல்லும் ஊழியர்களுக்கு விடுமுறை மற்றும் இலவச டிக்கெட் வழங்குவதாக அறிவித்திருக்கிறது பிரபல நிறுவனம் ஒன்று.

Advertising
>
Advertising

”சிலிர்க்க வைக்கும் சவுண்ட் எபெக்ட்ஸ்”… பீஸ்ட் படத்தின் லேட்டஸ்ட் தெறி Glimpse!

பீஸ்ட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இதில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் மற்றும் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். படத்திற்கான இசையை அனிருத் கம்போஸ் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் 'அரபிக்குத்து' அதன் பின்னர் 'ஜாலி ஓ ஜிம்கானா' என பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெறியேற்றி வந்தன. அது மட்டும் அல்லாமல் அவ்வப்போது பீஸ்ட் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்ட மனநிலையில் வைத்திருக்கிறது படக்குழு.

இந்நிலையில் ஏப்ரல் 13 (நாளை) இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது. இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் இந்த படம் நாளை திரைக்கு வருகிறது. முதல் நாள் முதல் ஷோவில் படம் பார்க்க பலரும் விரும்பிவரும் நிலையில், ஒரு நிறுவனமே தனது ஊழியர்களுக்கு பீஸ்ட் படத்திற்காக லீவ் கொடுத்திருக்கிறது.

ஏப்ரல் 13 (நாளை) வெளியாகும் பீஸ்ட் படத்தினை பார்க்க, ஊழியர்கள் பெரும்பாலானோர் விடுமுறை கேட்டு அந்த நிறுவனத்தில் விண்ணப்பித்திருக்கின்றனர். இதனை அறிந்த நிர்வாகம், நாளை அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

நைட் பிரைன்

திருப்பூரை சேர்ந்த பின்னலாடை நிறுவனமான நைட் பிரைன் தான் இந்த சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்," அதிக ஊழியர்கள் விடுமுறை கேட்டு விண்ணப்பித்ததன் காரணமாக இளையதளபதி விஜய்-ன் பீஸ்ட் படத்தினை முன்னிட்டு ஏப்ரல் 13 2022 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் நைட் பிரைன் இன்டர்நெஷனல் ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்களும் வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.

பீஸ்ட் படத்தை காண விடுமுறையும் அளித்து டிக்கெட்டையும் இலவசமாக நைட் பிரைன் நிறுவனம் கொடுத்த விஷயம் பற்றித்தான் இப்போது பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்.. மாஸாக களமிறங்கிய பிரபல இளம் நடிகை!

தொடர்புடைய இணைப்புகள்

Knitbrain declared a Holiday for Beast Movie Release

People looking for online information on Anirudh, Beast, Holiday for Beast Movie Release, Knitbrain, Nelson Dilipkumar, Pooja Hegde, Vijay will find this news story useful.