படுஜோராக நடந்த KL ராகுல் - அதியா திருமணம்.. வைரல் ஃபோட்டோஸ்.. வாழ்த்தும் பிரபலங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இலங்கை அணிக்கு எதிரான தொடரை முடித்த கையுடன் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் தற்போது ஆடி வருகிறது.

Advertising
>
Advertising

                                 Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் தெலுங்கு திரை உலகம்!!

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன கே எல் ராகுல், நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி இருந்தார்.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சுனில் செட்டியின் மகளும், நடிகையுமான் அதியா ஷெட்டியுடன் கே எல் ராகுலுக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது.

முன்னதாக, ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் காதலித்து வருவது பற்றி அவர்களே சில சமூக வலைத்தள பதிவில் அதிகாரபூர்வமாக குறிப்பிட்டிருந்தனர். இதே போல, பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்தும் வந்தனர். அவ்வப்போது இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் இருவரும் பகிர்ந்து வந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு மத்தியில், கடந்த சில மாதங்களாக கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் நடைபெறும் என்ற கருத்தும் பரவலாக இருந்து வந்தது. இதற்கு சுனில் ஷெட்டி கூட விரைவில் திருமணம் நடைபெறும் என ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அப்படி இருக்கையில், நியூசிலாந்து தொடரில் இருந்து கே எல் ராகுல் விலகியது அவருடைய திருமணத்திற்காக தான் என்றும் தகவல்கள் பரவி வந்தது.

இந்த நிலையில், கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோரின் திருமணம் நடந்து முடிந்தது  உறுதியாகி உள்ளது. அதியாவின் தந்தை சுனில் ஷெட்டி மற்றும் சகோதரர் அகான் ஷெட்டி ஆகியோர் ராகுல் - அதியா திருமணம் நடந்து முடிந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். பத்திரிக்கையாளர்களை சந்தித்து இனிப்பு வழங்கி இது பற்றி அவர்கள் அறிவித்திருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

தான் அதிகாரபூர்வமாக மாமனார் ஆகி விட்டதாகவும், சிறந்த முறையில் நெருங்கிய குடும்பத்தினர் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்ததாகவும் பத்திரிகையாளர்கள் முன்பு சுனில் ஷெட்டி கூறி உள்ளார். அதே போல, பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் தனது ட்விட்டர் பக்கத்தில் கே எல் ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு தனது திருமண வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இது தவிர சில கிரிக்கெட் பிரபலங்களும் ராகுல் திருமணத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நடிகை அதியா ஷெட்டி பகிர்ந்துள்ளார். திருமண கோலத்தில் கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ள நிலையில், திருமணம் குறித்த எமோஷனல் கருத்துக்களையும் தனது கேப்ஷனில் அதியா ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | அடுத்து 11-ஆம் வகுப்பு தான்... 73 வயதில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆன நடிகை!!

தொடர்புடைய இணைப்புகள்

KL Rahul and Athiya Shetty wedding suniel shetty update

People looking for online information on Athiya Shetty, KL Rahul, KL Rahul and Athiya Shetty wedding, Suniel shetty will find this news story useful.