சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் எப்போது ரிலீஸ்? தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'டாக்டர்'.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இந்த படத்தின் ரிலிஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளது. 

அதில் டாக்டர் படத்தின் அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனவும், அனைவரும் சிரிக்க தயாரகுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்கில் வெளியிட முடியாத சூழலால், நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Kjr studios sivakarthikeyan doctor movie release update

People looking for online information on ‎KJR Studios, Doctor, Nelson Dilipkumar, Priyanka Mohan, Sivakarthikeyan, Sivakarthikeyan Productions will find this news story useful.