நடிகர் உதயநிதி ஸ்டாலினும் அவருடைய மனைவி கிருத்திகாவும் பேசிக்கொண்ட பல வருடத்திற்கு முன்பான ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | ஓடிடியில் ரிலீஸ் ஆண்ட்ரியாவின் ‘அனல் மேலே பனித்துளி’ படத்தின் பரபரப்பான ஒன்லைன் இதுதான்..!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். குருவி திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆன உதயநிதி ஸ்டாலின் தம்முடைய ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார். இதனைத் தொடர்ந்து, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் கலகத் தலைவன் வரும் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்கிற திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண் ராஜா காமராஜா இயக்கிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக காவல் அதிகாரியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவருடைய மனைவி கிருத்திகா உதயநிதி இருவரும் பேசிக்கொண்ட பத்து வருடத்திற்கு முந்தைய twitter பதிவு தற்போது வைரலாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலினை காதலித்து திருமணம் செய்து கொண்ட கிருத்திகா உதயநிதி தமிழ் சினிமாவில் குறிப்பிட தகுந்த பெண் இயக்குனராக இயங்கி வருகிறார். இவர் வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அண்மையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பேப்பர் ராக்கெட் திரைப்படம் ஓடிடியில் வலைத் தொடராக வெளியாகி வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ட்விட்டரில் ரசிகர்களுடன் உதயநிதி கேள்வி பதில் அமர்வில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது டின்னருக்கு என்ன வேண்டும் என்று கிருத்திகா அதில் வந்து ரிப்ளை செய்ய, அதற்கு நான்கு ஆப்ஷன்களும் கொடுத்திருந்தார். அந்த நான்கு ஆப்ஷனிலும் a)தோசை b)தோசை c)தோசை d)தோசை என்று இருந்தது. இதுதான் இப்போது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த கிருத்திகா உதயநிதி குறிப்பிட்ட இந்த பதிவை பகிர்ந்து 10 வருடங்களுக்குப் பிறகும் இதே ஆப்ஷன்கள்தான் என்று வேடிக்கையாக பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
Also Read | தாய் இறந்த 48 நாளில் தந்தை மரணம்! சகோதரர் உட்பட ஒரே வருடத்தில் 3 இழப்புகள்..நொறுங்கிய மகேஷ் பாபு