கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக இந்தியாவில் பரவிவரும் சூழலில் தமிழக அரசு 144 தடை உத்தரவை இன்று மாலை 6 மணி முதல் பிறப்பித்துள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கொடிய நோய் வேகமாக பரவாமல் காத்துக்கொள்ளவும் இந்த நடிவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது.
ஆனால் திடீரென நேற்று மாலை சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் கூடிவிட்டனர். பேருந்து சேவை குறைவாக இருந்தும் அதிகம் பேர் நேற்று ஒரே நாளில் பயணம் செய்துள்ளனர். மக்கள் இடைவெளி கடைபிடிக்காமல் இப்படி அதிக கூட்டம் கூடியது அரசிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் நாயகன் சாந்தனு பானி பூரி கடை மற்றும் பீடா கடைகளில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் “மக்களே வெளியில் சுற்றுவதை நிறுத்துங்கள். கொரோனா நம்மளை தாக்காது என நினைக்க வேண்டாம். இடைவெளி விட்டு நிற்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
பீடா மற்றும் பானிபூரி கடைகளில் கூட்டம் இருப்பதை பார்க்க முடிகின்றது. போலீஸ் தடியடி நடத்துவதை நாம் தவிர்க்கலாம். உங்களுக்கு மட்டும் பிரச்சினை இல்லை. உங்களை சுற்றி இருக்கும் மக்களுக்கும் பிரச்சினை தான். படிப்பறிவில்லாதவர்கள், தினக்கூலிகள் இதை செய்தால் ஆச்சர்யமில்லை, ஆனால் அதிகம் படித்தவர்களே இப்படி செய்வது தான் வேதனை. தயவு செய்து வீட்டில் இருங்கள்” என தெரிவித்துள்ளார்.