BREAKING: சிவகார்த்திகேயனின் "மாவீரன்" படத்தில் கைகோர்க்கும் நடிகை இவரா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக சிபி சக்கரவர்த்தி இயக்கிய டான் திரைப்படம் வெளியானது.

Advertising
>
Advertising

Also Read | "கமல் சார் கூட அவ்ளோ நேரம் ஒர்க் பண்ணது.." Impress ஆன விக்னேஷ் சிவன்.. வைரலாகும் வீடியோ!!

கோவை பகுதிகளை மையமாக கொண்ட இந்த கதை களத்தில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில், மாவீரன் எனும் படத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க உள்ளார்.

சமீபத்தில், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புடன் கூடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியாகி இருந்தது.

மடோன் அஸ்வின் இயக்கி இருந்த மண்டேலா திரைப்படம், தேசிய விருதுகளை வென்றிருந்தது. அப்படி ஒரு இயக்குனருடன் சிவகார்த்திகேயன் கைக்கோர்த்திருப்பது பெரிய அளவில் தற்போதே எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்கிற கேள்விகள் ரசிகர்களிடையே இருந்து வந்தன. தற்போது அந்த கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் ஒரு அரிய தகவல் தெரிய வந்திருக்கிறது. அதன்படி சிவகார்த்திகேயனுடன் மாவீரன் திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகளும், நடிகையுமான அதிதி ஷங்கர் இணைவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இன்னும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Angamaly Diaries நடிகர் மர்மமான முறையில் மரணம்?.. வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 'உடல்'.. அதிர்ச்சி பின்னணி

தொடர்புடைய இணைப்புகள்

Kiara advani female lead in Sivakarthikeyan Maaveeran

People looking for online information on Aditi Shankar, Maaveeran, Prince, Sivakarthikeyan will find this news story useful.