அசத்தல்.. ஆரவாரம்.. பிரபல சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு ரீ-எண்ட்ரி கொடுக்கும் குஷ்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 14, பிப்ரவரி 2022: நடிகை குஷ்பு புதிய சீரியலில் நாயகியாக தோன்றவிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

நடிகை குஷ்பு

90களில் இருந்து திரைப்படங்களில் நாயகியாக நடித்து வந்த முன்னணி நடிகை குஷ்பு. முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்த குஷ்பு, பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் பெண் மைய கதாபாத்திர திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Also Read: அரபிக் குத்து.. ரிலீஸ் ஆனதும் மில்லியன் வியூவ்ஸை கடந்த பீஸ்ட் முதல் சிங்கிள் லிரிக் வீடியோ..

திரை, அரசியல்

நடிகர் மற்றும் இயக்குநர் சுந்தர் சி-யின் மனைவியான குஷ்பூ, அரண்மனை திரைப்படத்தையும் தயாரித்ததுடன், தம்முடைய அவ்னி சினிமாக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மேலும் சில திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். தொடர்ந்து அரசியலிலும் சினிமாவிலும் இயங்கி வருகிறார்.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த அண்ணாத்த திரைப்படத்தில் தோன்றியிருந்த நடிகை குஷ்பு முன்பாக, சன் டி.வியில் ஒளிபரப்பான ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலிலும், இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில், ‘கோகுலத்தில் சீதை’ சீரியலிலும் நடித்திருந்தார்.

புதிய சீரியல்

இந்நிலையில் தான் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கப்படவிருக்கும் மீரா என்கிற புதிய சீரியலில் நடிகை குஷ்பு முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறார். இந்த சீரியல் தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பூஜை தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதனிடையே 90களின் புகழ்பெற்ற நடிகர் மோகனுடன் நடிகை குஷ்பு முதல் முதலாக இணையும் தமிழ்த் திரைப்படம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

Also Read: ஹன்சிகா நடிக்கும் புதிய படம்.. கிளாப் போர்டு அடிச்ச விஜய் சேதுபதி.. பரவும் ஃபோட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Khushubu new serial entry புதிய சீரியலில் நடிகை குஷ்பு

People looking for online information on Colors Tamil, Khusbhoo, Khusbhu Sundar, Khusbu, Sun TV, Tv Serial will find this news story useful.