'வாரிசு' படத்தில் குஷ்பு ரோல் இது தான்..! அவரே சொன்ன EXCLUSIVE தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை குஷ்பு மனம் திறந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | நடிகை கீர்த்தி சுரேஷ் & ஜான்வி கபூர் திடீர் சந்திப்பு.. ரசிகர்களை கவரும் சூப்பர் ஃபோட்டோ!

தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

'வாரிசு' படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறார்கள்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, பென்குயின், ஆதிபுருஷ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். கார்த்திக் பழனி மெர்குரி (2018) மற்றும் பேட்ட (2019) ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளராக பணியாற்றியவர். பல ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வம்சியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில வாரங்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் 2023 பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படம் பற்றி நடிகை குஷ்பு நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். வாரிசு படத்தில் தனது கதாபாத்திரம் படம் முழுவதும் வரும் கதாபாத்திரம் அல்ல என்றும் சிறிய கேமியோ போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறினார். மேலும் சிறிய ரோலாக இருந்தாலும்  வாரிசு படத்தில் தான் நடித்துள்ள அனைத்து காட்சிகளிலும் நடிகர் விஜய்யுடன் தனக்கு காம்பினேஷன் காட்சிகள் உள்ளன என்றும் குஷ்பு கூறியுள்ளார்.

Also Read | "இது தான் எனக்கு விருப்பமான உடை" - சன்னி லியோன் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

'வாரிசு' படத்தில் குஷ்பு ரோல் இது தான்..! அவரே சொன்ன EXCLUSIVE தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Khushbu Talks about her role in Vijay Starring Varisu

People looking for online information on Khushbu, Varisu Movie, Vijay will find this news story useful.